Skip to content

சொல் பொருள்

(பெ) 1. குற்றம், நரம்புகளிலுள்ள கொடுமுறுக்கு, 2. விதை, 3. அரளி, அலரி,

சொல் பொருள் விளக்கம்

1. குற்றம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

fault, knot in a string

Oleander, l.sh., Nerium odorum;

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

குரல் ஓர்த்துத் தொடுத்த சுகிர்புரி நரம்பின்
அரலை தீர உரீஇ – மலை 23,24

ஓசையை கூர்ந்து கேட்டுக் கட்டின வடித்து முறுக்கின நரம்பில்
குற்றம் தீரத் தீற்றி

புண்ணரிந்து, அரலை உக்கன நெடும் தாள் ஆசினி – மலை 139

புண்ணாகி வெடித்து, விதைகள் சிந்தப் பெற்றன நெடிய அடியை உடைய ஆசினிப்பலாமரங்கள்

அரலை மாலை சூட்டி – குறு 214/6

அரளிப்பூ மாலை சூட்டி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *