சொல் பொருள்
குழையடித்தல் – ஏமாற்றல்.
சொல் பொருள் விளக்கம்
நோய் நொடி என்று ஒருவர்க்கு ஏற்பட்டால் அவர்களுக்கு மந்திரிப்பவர்கள் வேப்பங்குழையை எடுத்து வீசித் தண்ணீர் தெளிப்பதுண்டு. நம்பிக்கையால் நோய் நீங்கியதாகச் சொல்வதும் உண்டு. ஆனால் எல்லார்க்கும் அம்மந்திரிப்பு பயன்படுவதில்லை. அதனால் பயன்படாதவர் அம்மந்திரிப்பை அல்லது குழையடிப்பை ஏமாற்றுதல் எனக் கூறினர். அதிலிருந்து அப்பொருள் தருவதாயிற்று. பனிக்கட்டி வைத்தல், குளிப்பாட்டல், தலைதடவல் என்பனவெல்லாம் குழையடித்தல் போன்ற ஏமாற்றே எனினும் நுண்ணிய வேறுபாடுள்ளவை என்பதை ஆங்காங்கு அறிக.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்