சொல் பொருள்
(வி) தளை, கட்டு, பிணி
கம்பு, சோளம் முதலியவற்றின் அடி
தட்டு என்பது தடை என்னும் பொருளில் பொது வழக்குச் சொல். தட்டு என்பது தட்டை என்னும் பொருளில் பழனி வட்டார வழக்காக உள்ளது
தட்டுதல் என்பது கிடைத்தல் என்னும் பொருளில் சீர்காழி வட்டார வழக்காக உள்ளது
சொல் பொருள் விளக்கம்
தட்டு என்பது தடை என்னும் பொருளில் பொது வழக்குச் சொல். தட்டு என்பது தட்டை என்னும் பொருளில் பழனி வட்டார வழக்காக உள்ளது. தட்டுத்தடை என்பது இணைச்சொல். தட்டுப்படுதல் தோன்றுதல் பொருளது. “கண்ணில் தட்டுப்பட்டாள்” – என்பது பாவேந்தர் பாடிய அழகின் சிரிப்பு. தட்டுதல் என்பது கிடைத்தல் என்னும் பொருளில் சீர்காழி வட்டார வழக்காக உள்ளது. ‘தட்ட மாட்டேன் எனப் போகிறது’ என்பது முகவை வழக்கு. அதுவும் கிடைத்தல் பொருளதேயாம்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
bind, entangle
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நிலன் நெளி மருங்கில் நீர்நிலை பெருக தட்டோர் அம்ம இவண் தட்டோரே – புறம் 18/28,29 நிலம் குழிந்தவிடத்தில் நீர்நிலை பெருகும்வண்ணம் நீரினைப் பிணித்துவைத்தோர் தாம் செல்லும் உலகத்துச் செல்வம் முதலாகியவற்றை இவ்வுலகத்துத் தம் பேரோடு பிணித்துக்கொண்டவராவர்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்