Skip to content
தருப்பை

தருப்பை என்பது ஒருவகைப் புல்

1. சொல் பொருள்

(பெ) கூரை வேயப் பயன்படும் நீளமான ஒருவகைப்புல், நாணல், தர்ப்பை, குசப்புல்

2. சொல் பொருள் விளக்கம்

கூரை வேயப் பயன்படும் நீளமான ஒருவகைப்புல். கதிர்வீச்சினை எதிர்க்கும் சக்தி கொண்ட தாவரமாகும்? தர்ப்பை, குசம் அல்லது குசா முதலிய பெயர்களால் வழங்கப்படுகிறது

வயல்களில் இவை களைச்செடியாக காணப்படுகின்றன

தருப்பை
தருப்பை

மொழிபெயர்ப்புகள்

বাংলা: কুশفارسی: کَرتهfrançais: Kushaગુજરાતી: દર્ભעברית: חילף החולותಕನ್ನಡ: ದರ್ಭೆlietuvių: Plunksninė pomiglėമലയാളം: ദർഭमराठी: दर्भनेपाली: कुशسنڌي: ڊڀதமிழ்: தருப்பைப்புல்తెలుగు: దర్భไทย: หญ้ากุศะاردو: کش

Daabh • Assamese: কুশ Kush • Bengali: কুশ Kush • Hindi: डाभ Dabh, Davoli, Durva, Dabhena • Kannada: kusha, dharbe • Malayalam: darbha, darbhappullu • Marathi: Darbha, डाभ Daabh • Sanskrit: barhi, darbha, darbhah, durbha • Tamil: darbhaipul, taruppai, acamantakam • Telugu: aswalayana, dabha, darbha • Urdu: bikh dab

3. ஆங்கிலம்

long grass used for the roof in huts, Darbha’ grass, Halfa Grass? Kans grass? Desmostachya bipinnata, saccharum spontaneum, Linn.

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

தருப்பை
தருப்பை
வேழம் நிரைத்து வெண் கோடு விரைஇ
தாழை முடித்து தருப்பை வேய்ந்த
குறி இறை குரம்பை பறி உடை முன்றில் – பெரும் 263-265

மூங்கில்கோலை நெடு வரிசையாகச் சார்த்தி, வெண்மையான மரக்கொம்புகளை குறுக்காகப் பரப்பி,
தாழைநாரால் (இரண்டையும்)முடித்துத் தருப்பைப்புல்லை (அதன் மேல்)வேய்ந்த
குறுகிய இறப்பையுடைய குடிலின், (மீன்பிடிக்கும்)பறியினையுடைய முற்றத்தில்

பிரியா தருப்பை பிடித்த கையினன் – மது:22/32

தருப்பையில் கிடத்தி வாளில் போழ்ந்து – மணி:23/13

தரு மணல் தருப்பை ஆர்ந்த சமிதை இ மூன்றினானும் – சிந்தா:12 2463/1

மந்திர விதியின் மாண்ட சிறு விரல் தருப்பை சூழ்ந்து – சிந்தா:12 2465/1

முந்து நாம் மொழிந்த நெய்யை முனை முதிர் தருப்பை தன்னால் – சிந்தா:12 2465/2
தர்ப்பைப்புல்
தர்ப்பைப்புல்
தண்டின் மீது இரு கோவணம் நீற்றுப்பை தருப்பை
கொண்டு வந்து அமர்நீதியார் திரு மடம் குறுக – 2.தில்லை:7 9/3,4

அம் பொன் வாச நீர் பொன் குடம் அரசு இலை தருப்பை
பம்பு நீள் சுடர் மணி விளக்கு ஒளிர் தரும் பரப்பில் – 6.வம்பறா:1 1185/3,4

தாமரை மலரோன் போல்வார் அரசிலை தருப்பை தோய்ந்த – 6.வம்பறா:1 1224/3

ஆரணங்கள் மதுர ஒலி எழுந்து பொங்க அரசிலையும் தருப்பையும் பெய்து அணிந்த வாச – 6.வம்பறா:1 258/1

தருப்பை பொன் கொடியாக இரக்கமொடு – மகத:24/182

தண்டிலம் விரித்தனன் தருப்பை சாத்தினன் – பால:23 84/1

வெண் நிறத்த தருப்பை விரித்து-அரோ – அயோ:2 31/4

மெய் தருப்பை நூல் பிறழும் மேனியார் – கிட்:15 17/3

நெல்லினால் அலக்கும் காலும் நிரப்பினான் தருப்பை என்னும் – யுத்1:9 16/3

உய்த்த போது தருப்பையில் ஒண் பதம் – சுந்:3 24/3

சந்தனம் குவித்து வேண்டும் தருப்பையும் திருத்தி பூவும் – ஆரண்:13 134/2

வேள்விக்கு வேண்டல்-பால தருப்பையும் விறகும் நெய்யும் – யுத்3:26 93/1

காமர் வண் தருப்பையும் பிறவும் கட்டு அற – யுத்3:27 57/2

ஓட்டினன் தருப்பையை உடை கண் நீர் விழ – பால-மிகை:8 13/3

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *