சொல் பொருள்
(வி) தன்னுள் அடக்கு
(பெ) 1. அலை, 2. சுருக்கம்,
சொல் பொருள் விளக்கம்
தன்னுள் அடக்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
cover, contain, waveWrinkle, as in the skin through age
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நிலம் திரைக்கும் கடல் தானை – புறம் 97/14 நிலத்தைத் தன்னுள்ளே அடக்கும் கடல் போன்ற படையுடன் வீங்கு திரை கொணர்ந்த விரை மர விறகின் – சிறு 155 மிகுகின்ற அலை கொண்டுவந்த மணத்தையுடைய (அகில்)மர விறகால் கயல் முள் அன்ன நரை முதிர் திரை கவுள் – புறம் 195/2 மீனின் முள் போன்ற நரை முதிர்ந்த சுருங்கிப்போன கன்னத்தினையும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்