சொல் பொருள்
(வி) 1. வருடு, உருவிவிடு, தேய், 2. தடவிக்கொடு, 3. தடவிப்பார், 4. சுருதியேற்று,
சொல் பொருள் விளக்கம்
வருடு, உருவிவிடு, தேய்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
massage, shampoo, rub, stroke, grope, harmonise with the key-note
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மட மான் நோக்கின் வாள் நுதல் விறலியர் நடை மெலிந்து அசைஇய நன் மென் சீறடி கல்லா இளையர் மெல்ல தைவர – சிறு 31-33 மடப்பத்தையுடைய மான்(போலும்) பார்வையையும்; ஒளியுள்ள நெற்றியையும் (உடைய)விறலியரின் நடையால் இளைத்து ஓய்ந்த நல்ல மெல்லிய சிறிய அடியினை கல்வி நிரம்பாத இளைஞர் மெத்தென்று வருடிநிற்க விசும்பு தைவரு வளியும் – புறம் 2/3 ஆகாயத்தைத் தடவிவரும் காற்றும் அல்கல் பொய் வலாளன் மெய் உற மரீஇய வாய் தகை பொய் கனா மருட்ட ஏற்று எழுந்து அமளி தைவந்தனனே – குறு 30/1-4 நேற்று இரவில் அந்தப் பொய்சொல்வதில் வல்ல தலைவன் என்னை மார்புறத் தழுவிய வாய்ப்பதற்கேதுவான பொய்க்கனவு மருட்ட, நினைவு பெற்று எழுந்து படுக்கையைத் தடவிப்பார்த்தேன்! நயவன் தைவரும் செவ்வழி நல் யாழ் – அகம் 212/6 யாழ்வல்லோன் சுருதியேற்றும் நல்ல யாழின் செவ்வழிப்பண்ணை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்