சொல் பொருள்
(பெ) சங்க காலத்துச் சேர மன்னர்களுள் ஒருவன்,
சொல் பொருள் விளக்கம்
இவன் ஒரு சேரநாட்டு மன்னன். இவன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் எனப்படுவான். சங்க இலக்கியங்களில் ஒன்றான பதிற்றுப்பத்தின் நான்காம் பத்து இவனைப் பாடுகிறது. இதனைப் பாடியவர், காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர். இவனது தந்தை சேரலாதன், தாய் வேளாவிக் கோமான் பதுமன் தேவி இந்தக் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் ஆண்ட நாட்டின் ஒரு பகுதியை பொலம் பூண் நன்னன் என்பவன் கைப்பற்றிக்கொண்டான். அவனை ப் பெருந்துறை என்னுமிடத்தில் போரிட்டு வென்று இழந்த தன் தன் நாட்டை இவன் மீட்டுக்கொண்டான் என்று கல்லாடனார் அகநானூற்றின் பாடியுள்ளார்..
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a chera king of sangam period.
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குடாஅது இரும் பொன் வாகை பெருந்துறை செருவில் பொலம் பூண் நன்னன் பொருது களத்து ஒழிய வலம் படு கொற்றம் தந்த வாய் வாள் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் இழந்த நாடு தந்து அன்ன – அகம் 199/18-23 இந்தக் கல்லாடனார், பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பற்றியும் பாடியிருப்பதால் இவன் அந்த நெடுஞ்செழியன் காலத்தவன் ஆதல் வேண்டும். இவனது வெற்றிகளையும், பெருமைகளையும் பதிற்றுப்பத்துப்பாடல்கள் எடுத்தியம்புகின்றன.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்