சொல் பொருள்
நீட்ட – கொடுக்க
குறைக்க – மறுக்க
சொல் பொருள் விளக்கம்
கொடுத்துப் பழக்கப்படுத்திவிட்டு அதற்குப் பின்பு கொடுக்க மறுத்தால் வெறுப்பைக் கட்டிக் கொள்ள நேர்தல் உண்டு. “ நீட்டக் குறைக்க நெடும்பகை” என்பது பழமொழி. நீட்டுதல் கொடுத்தற்குக் கையை நீட்டுதல். கொடுக்காதவனை ‘நீட்ட மாட்டானே’ எனப் பழிப்பர். தருகை நீண்ட தயரதன் என்றார் கம்பர். குறைத்தல் சுருக்குதலும் இல்லையெனலும் தழுவியது.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்