சொல் பொருள்
(வி) 1. நீச்சலடி, 2. நடந்து கட, 3. பறந்து செல், 4. பொழுதைக்கழி,
சொல் பொருள் விளக்கம்
நீச்சலடி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
swim, across over, fly across, pass the time
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அவிர் அறல் ஒழுகும் விரை செலல் கான்யாற்று கரை அரும் குட்டம் தமியர் நீந்தி – நற் 144/7,8 ஓளிவிடும் நீர் நிறைந்து விரைந்து ஓடும் காட்டாற்றின் கரை தெரியாத ஆழமான மடுக்களைத் தன்னந்தனியே நீந்தி இலங்கு அருவிய வரை நீந்தி – மது 57 விளங்குகின்ற அருவிகளையுடைய மலைகளைக் கடந்து சிறு பைம் தூவி செம் கால் பேடை நெடு நீர் வானத்து வாவு பறை நீந்தி வெயில் அவிர் உருப்பொடு வந்து கனி பெறாஅது – அகம் 57/1-3 சிறிய மெல்லிய சிறகுகளையும் சிவந்த கால்களையும் உடைய வௌவால் பேடை நீண்ட தன்மையையுடைய வானத்தில் தாவித்தாவிப் பறந்து கடந்து, வெயில் தகதகக்கும் வெம்மையோடு வந்து, (மரத்தில்) கனி பெறாது எல்லை கழிய முல்லை மலர கதிர் சினம் தணிந்த கையறு மாலை உயிர் வரம்பு ஆக நீந்தினம் ஆயின் எவன்-கொல் வாழி தோழி கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே – குறு 387 பகற்பொழுது கழிய, முல்லை மலர, ஞாயிறு தன் சினம் தணிந்த செயலற்ற இந்த மாலைப்பொழுதை உயிரை எல்லையாகக் கொண்டு நீந்திக்கழித்தேனென்றால், என்ன பயன்? வாழ்க தோழியே! இரவாகிய வெள்ளம் கடலைக்காட்டிலும் பெரியதாக இருக்குமே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்