சொல் பொருள்
பெரிய ஆள் – சின்னவன்
சொல் பொருள் விளக்கம்
பெரியஆள் என்பது பெருமாள். பெருமகள் என்பதும் பெருமாள் ஆம். திருமால், நெடுமால், பெருமாள் என்றெல்லாம் வழங்குவது, “ஓங்கி உயர்ந்த உத்தமன்” நீர்செல் நிமிர்ந்த மாஅல்” எனப் பாராட்டப்படுகிறது. இவண், ‘பெரிய’ என்பது சொல்லளவில் பெருமை சுட்டப்படினும் பொருளளவில் சிறுமை சுட்டுவதாக எள்ளற் பொருளில் வழங்குகின்றது. “வருகிறேன் என்று சொல்லிவிட்டு வரவில்லை; நீ பெரிய ஆள்தான்” நீ பெரிய ஆள்தான் பேசும்போது என்ன பேசினாய்; இப்போது என்ன செய்கிறாய்” என்பவற்றில் சிறுமைக் குறிப்புண்மை அறிக. கல்லைக் கடித்துக்கொண்டு நல்ல சமையல் எனின் பாராட்டாகுமா? அத்தகையது இப்பெரிய ஆள்!
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்