சொல் பொருள்
போதல் – சாவு
சொல் பொருள் விளக்கம்
போதல் என்பது ஓரிடம் விடுத்து ஓரிடம் அடைதலைக் குறிக்கும். “போனார் தமக்கோர் புக்கில் உண்டு” என்பது மணிமேகலை. போதல் வருதல் இல்லாமல் ஒரே போக்காகப் போதல் திரும்பாமையைக் குறிக்கும். போய்ப் போய் இப்படி வருவதற்கு ஒரே போக்காகப் போய்விட்டாலும் தலையை முழுகலாம். அதற்கும் வழியில்லை என்பதில் ஓடிப்போனவர்களைத் தேடித் தவித்த துயர் வெளிப்படும். போதல் உயிர் போதல், வீட்டை விட்டுப்போதல் என்பவற்றுடன் மீளாத இடத்திற்குப் போதல் பொருளும் தந்து ‘சாவு’ ஆயிற்றாம்.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்