Skip to content

சொல் பொருள்

1. (வி) 1. கால் பதி, அடி வை,  2. காலால் துவை, அழுத்து,

2. (பெ) மிதித்துத் திரட்டப்பெற்ற கவளம்

சொல் பொருள் விளக்கம்

கால் பதி, அடி வை, 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

tread on, walk, step, tread down, trample on, Food trampled and formed into a ball

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மிதி உலை கொல்லன் முறி கொடிற்று அன்ன – பெரும் 207

மிதி(த்து ஊதுகின்ற) உலை(யைக் கொண்ட)கொல்லனுடைய முறிந்த கொறடை ஒத்த

மிதி அல் செருப்பின் பூழியர் கோவே – பதி 21/23

மிதிக்கும் செருப்பு அல்லாத செருப்பு என்னும் மலையினையுடைய பூழியரின் அரசே

நெடும் கை யானை நெய் மிதி கவளம் – பெரும் 394

நெடிய கைகளையுடைய யானைக்கு இடும் நெய்வார்த்து காலால் துவைத்த கவளத்தை

நெய்ம் மிதி முனைஇய கொழும் சோற்று ஆர்கை – அகம் 400/7

நெய் பெய்து மிதித்து இயற்றிய கவளத்தை வெறுத்த கொழுவிய சோற்றை உண்ணுதலையுடைய

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *