சொல் பொருள்
மூக்குடைபடுதல் – இழிவுபடுதல்
சொல் பொருள் விளக்கம்
மூக்கறுபடல் போல்வதோர் வழக்கு இது. மூக்கை உடைக்காமலே உடைத்தது போன்ற இழிவுக்கு ஆட்படுத்துதல் மூக்குடை படுதலாம். உடைபடுதல் என்பதால் எலும்பை உடைத்தல் என்பது தெளிவாம். அறுத்தல் தோலுக்கு ஆம். அதனினும் வன்மை எலும்பை உடைத்தல். குளம் உடைந்தால் நீர் வழியும்; இவண் குருதிவழியும். மூக்குடைபட்டுக் குருதியொழுகச் செய்வது போல இழிவுறச் செய்தலாம். “நன்றாக மூக்கை உடைத்தாய்; அதற்குப் பின்னர் அவன் வாயைத் திறந்தானா?” என்பதில் இழிவுறுத்தல் பொருள் உள்ளதாம்.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்