மேட்டிமை என்பதன் பொருள்பெருமை;தன்னை உயர்வாக, தற்பெருமையாகப் பேசும் இயல்பு.
1. சொல் பொருள்
மேட்டிமை – பெருமை, அகந்தை, தலைமை, மேன்மை
தன்னை உயர்வாக, தற்பெருமையாகப் பேசும் இயல்பு
மொழிபெயர்ப்புகள்
2. ஆங்கிலம்
haughtiness, loftiness
unreasonable and inordinate self-esteem
3. சொல் பொருள் விளக்கம்
மேடு, உயர்வு; மேட்டிமை என்பது மேடாம் தன்மையைக் குறியாமல் தன்னை மேலாக நினைக்கும் செருக்கைச் சுட்டுவதாம். “அவன் மேட்டிமைக்காரன்; எவரையும் மதித்துப் பேசான்” என்பதில் அவனுக்குள்ள செருக்குப் புலப்படுதல் வெளிப்படையாம். “உனக்கு மேட்டிமை இருந்தால் இருக்கட்டுமே! எங்களுக்கு ஆவதென்ன” என்று மேட்டிமைக்காரனை நெருங்காது விலகுவதும் மானத்தர் உணர்வாம்.
மேடு=உயரம். மேட்டிமை=தன்னை உயர்வாக – தற்பெருமையாகப் பேசும் இயல்பை மேட்டிமை என்பர். அத்தகையவனை ‘மேட்டிமைக்காரன்’(a proud man.) எனப் பழிக்கவும் செய்வர். மேட்டுக்குடி என்பது செழிப்பான வாழ்வினர் குடியிருப்பு. இம் மேட்டிமை செருக்குத் தனமாகும். இது நெல்லை, முகவை வழக்கு.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்