சொல் பொருள்
(வி) 1. உயிரினங்கள் பெரிதாகு, 2. மிகு, அதிகமாகு, 3. வளர்த்து, வளரச்செய், 4. மிகுதியாக்கு, 5. தூங்கு, துயில்,
சொல் பொருள் விளக்கம்
உயிரினங்கள் பெரிதாகு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
grow, develop, increase, expand, wax, enlarge, raise, nurture, cause to increase, sleep
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: களர் வளர் ஈந்தின் காழ் கண்டு அன்ன – பெரும் 130 களர் நிலத்தே வளர்ந்த ஈந்தின் விதையைக் கண்டாற் போன்று வளர் இளம் பிள்ளை தழீஇ – பெரும் 204 வளரும் இளமையான (தம்)குஞ்சுப்பறவைகளைத் அணைத்தவாறு அம் வாய் வளர் பிறை சூடி – பெரும் 412 அழகிய வாயைக்கொண்ட வளர்பிறையைச் சூடி வார் பெயல் வளர்த்த பைம் பயிர் புறவில் – அகம் 324/5 பெய்யும் மழை வளர்த்த பசிய பயிரினையுடைய காட்டில் பகை வளர்த்து இருந்த இ பண்பு இல் தாயே – புறம் 336/12 ஊர்க்குப் பகைவர் மிகவுளராக இருத்தலால் பண்பின்மையுடைய இத் தாய் பாயல் வளர்வோர் கண் இனிது மடுப்ப – மது 630 படுக்கையில் துயில்கொள்வோர் கண் இனிதாகத் துயில
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்