சொல் பொருள்
வழுக்கை – வழுக்கிக்கொண்டு செல்லல்
சொல் பொருள் விளக்கம்
வழுக்கும் இடமும், வழுக்கும் பொருளும் வழுக்கையாம். முன்னது வரப்பு வழுக்கல்; பின்னது இளநீரில் வழுக்கை. தலை வழுக்கை வழுக்கையுமாம் மழுக்கையுமாம். முழுக்க வழித்தது மழுக்கை; மயிர் உதிர்ந்து முளைக்காதது வழுக்கை. வழுக்கைக் கல் போல, பொருள்போல அமைந்தது என உவமைப் பொருளதாம். இங்குக் காணும் வழுக்கை அப்பருப்பொருள் நீங்கிய நுண்பொருள் வழுக்கையாம். ஒன்றைச் சொன்னால் ‘ஆம்’ என ஏற்காமல், ‘அன்று’ எனவும் மறுக்காமல் வழுக்கிக் கொண்டு போய்விடலாம். “அவனே வழுக்கை; அவன் எப்படி எள்ளுக்காய் பிளந்தது போலத் தீர்த்து வைக்கப் போகிறான்” என்னும் தெளிவு வழுக்கைப் பொருள் விளக்கும்.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்