சொல் பொருள்
(பெ) 1. விளைச்சல், மகசூல், 2. விளைந்தது, உற்பத்தியானது
சொல் பொருள் விளக்கம்
விளைச்சல், மகசூல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
produce, crop, produce, that which is matured
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கல் காயும் கடு வேனிலொடு இரு வானம் பெயல் ஒளிப்பினும் வரும் வைகல் மீன் பிறழினும் வெள்ளம் மாறாது விளையுள் பெருக – மது 106-109 பாறைகள் சூடேறும் கடுமையான வேனிலால் பெரிய மேகம் மழையை மறைத்துக்கொண்டாலும், (நாள்தோறும் முறையாக)வரும் விடியற்காலத்து வெள்ளி (தன் திசையில்)மாறினாலும், மிகுந்த நீர் மாறாது (வருகையினால்)விளைச்சல் பெருக வேய் பெயல் விளையுள் தே கள் தேறல் – மலை 171 மூங்கில் குழாய்க்குள் பெய்தலுற்று விளைவித்ததான தேனால் செய்த கள்ளின் தெளிவை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்