சொல் பொருள்
(பெ) 1. வானுலகத்தார், 2. சிறந்தோர், 3. பெரும் வீரர்கள்,
சொல் பொருள் விளக்கம்
வானுலகத்தார்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
celestial beings, excellent persons, great warriors
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உயர்ந்த தேஎத்து விழுமியோர் வரினும் பகைவர்க்கு அஞ்சி பணிந்து ஒழுகலையே – மது 200,201 உயர்ந்த வானுலகத்துத் தேவரும் (பகைவராய்)வந்தாலும், (அப்)பகைவர்க்கு அஞ்சிப் பணிந்து நடக்கமாட்டாய்; தண் கடல் நாடன் ஒண் பூ கோதை பெருநாள் இருக்கை விழுமியோர் குழீஇ விழைவு கொள் கம்பலை கடுப்ப – மது 524-526 குளிர்ந்த கடல் சேர்ந்த நாட்டையுடையனாகிய, ஒளிரும் பனந்தாரையுடைய சேரனுடைய பெரிய நாளோலக்க இருப்பில் சீரியோர் திரண்டு விரும்புதல் கொண்டு (எழுப்பும்)ஆரவாரத்தை ஒப்ப களிறு எறிந்து முரிந்த கதுவாய் எஃகின் விழுமியோர் துவன்றிய அகன் கண் நாட்பின் – பதி 45/4,5 களிற்றை எறிந்ததால் நுனிமடிந்து கொறுவாய்ப்பட்டுப்போன வேலினைக் கொண்ட சிறந்த போர்வீரர் சூழ்ந்திருக்கும் அகன்ற இடத்தையுடைய போர்க்களத்தையும் உடைய, வேல் ஈண்டு தானை விழுமியோர் தொலைய – புறம் 41/2 வேல் நெருங்கிய படையினையுடைய பெரியோர் மாண்டுபோக
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்