சொல் பொருள்
(பெ) 1. கீழிறங்கி வருதல், 2. விருப்பம்
சொல் பொருள் விளக்கம்
கீழிறங்கி வருதல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
coming down, desire
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அணங்கு வீழ்வு அன்ன பூ தொடி மகளிர் மணம் கமழ் நாற்றம் தெருவுடன் கமழ – மது 446,447 தெய்வமகளிர் கீழிறங்கிவந்ததைப் போல, பூத்தொழில் செய்த வளையலினையுடைய மகளிரின், மணம் கமழ்கின்ற வாசனை தெருவெங்கும் வீச, ஊர் இழந்தன்று தன் வீழ்வு உறு பொருளே – அகம் 189/15 இந்த ஊரானது தனது விருப்பம் மிக்கதொரு பொருளை இழந்ததாயிற்று
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்