சொல் பொருள்
வெட்டி முரித்தல் – கடிய வேலை செய்தல்
சொல் பொருள் விளக்கம்
குச்சியாக இருக்கும்போது கையால் ஒடித்து விடலாம். முளையாக இருக்கும்போது கிள்ளி எடுத்து விடலாம். மரமாகிய பின்னர் வெட்டியே ஆகவேண்டும். கோடரி, வெட்டரிவாள், கம்பி, அரம்பம் ஆகியவெல்லாம் வேண்டும். ஆதலால் வெட்டிமுரித்தல், கடும்வேலை செய்தல் பொருளதாம். “இளைதாக முள்மரம் கொல்க களையுநர் கை கொல்லும் காழ்த்த விடத்து” என்பதில் வெட்டி முரித்தற் கடுமை புலனாம். உழையாத சோம்பர் சிலர் உடல் அலுப்பாக இருக்கிறது என்றால் ‘வெட்டி முரித்தவன்; அலுப்பு இருக்கத்தான் செய்யும்” என ஏற்பது போல் எள்ளுவர்.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்