Skip to content

சொல் பொருள்

(பெ) 1. ஆரால் மீன்,

2. கார்த்திகை பார்க்க ஆல்

சொல் பொருள் விளக்கம்

1. ஆரால் மீன்,

ஆரல் மீன் ஒரு நன்னீர் வாழ் மீனாகும். இம்மீன் எலும்பு மீன் வகையைச் சார்ந்தது. இதனை எலும்பு மீன்,
முள் விலாங்கு, சிறு விலாங்கு என்றும் அழைப்பர். ஆரல் மீன் எலும்பு மீன்களில் osteiich thyes வகுப்பில்
முழு எலும்பு மீன்களின் – Teleosteli – மேல்வரிசையில் Masta Cembalofirmes வரிசையில் Masta cembrnlidae
குடும்பத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆரல் மீன் அதிக நீளத்துக்கு வளராது. சராசரியாக 50-120 செ.மீ
நீளத்துக்கு வளரும். இது பச்சை அல்லது பழுப்பு மேற்புறத்தையும் மஞ்சள் கலந்த வயிற்றுப் பகுதியையும்
கொண்டது. புள்ளிகளைக் கொண்ட பழுப்பு நிற ஆரல் மீனும் உண்டு. ஆரல்மீன்கள்தாவர உணவையே விரும்பி
உண்ணும் தன்மையுடையவை
– நன்றி – சங்க இலக்கியத்தில் நீர்வாழ் இடம்பெயரும் உயிரினங்கள் –
– https://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/148095/11/11_chapter%205.pdf

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Brownish or greenish sand-eel, Rhynchobdella aculeata

The third nakṣatra

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு – குறு 25/4,5

ஓடுகின்ற நீரில் இருக்கும் ஆரல்மீனைப் பார்க்கும் நாரையும் உண்டு

மணி மிடற்று அண்ணற்கு மதி ஆரல் பிறந்தோய் நீ – பரி 9/7

நீலமணிபோலும் கழுத்தை உடைய தலைவனுக்கு மதிப்புள்ள கார்த்திகைப் பெண்களிடத்தில் பிறந்தவனே

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *