சொல் பொருள்
குப்பை – குவியலாகப் போடப்பட்ட உரமும் கழிவுப் பொருள்களும்.
கூளம் – மாடு தின்று எஞ்சிய வைக்கோல் தட்டை முதலியவற்றின் துண்டு துணுக்குகள்.
சொல் பொருள் விளக்கம்
“குப்பை கூளம் சேரவிடாதே; பூச்சி பொட்டை சேர்ந்து விடும்” என உழவர் வீடுகளில் கூறுவது வழக்கம். ‘குப்பைக்குப் போவதைக் குப்பை’ என்கின்றனர் என்க.
கூளம் என்பது செத்தை, செதும்பை என்பவையாம். கீரையில் கிடக்கும் புல் முதலியவற்றை எடுத்தலைக் கூளம் பார்த்தல் என்பது நடைமுறை. கூளம் என்பது மாட்டுத் தீனியாம் தட்டை தாளைக் குறித்தலும் உண்டு. கூலம், தவசத்தையும் கூழ், உணவையும் குறித்தல் இவண் அறிக.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்