சொல் பொருள்
கையடித்தல் – உறுதி செய்தல்
சொல் பொருள் விளக்கம்
ஒன்றை ஒப்புக் கொண்டு உறுதி சொல்பவரும், ஒன்றைத் தந்ததாக வாக்களிப்பவரும் ‘கையடித்துத்’ தருதல் உண்டு. ஒருவர் கைமேல் ஒருவர் கையை வைத்து எடுப்பதே கையடித்தலாம். உறுதி (சத்தியம்) சொல்வார் தலையில் கைவைத்தல். துணி மேல் கைவைத்தல், புத்தகத்தின்மேல் கைவைத்தல், தாங்கள் மதிக்கும் பொருள்மேல் கைவைத்தல் எனப் பல வகையால் சொல்வதுண்டு. “பரங்குன்றம் அடி தொட்டேன்” என மலையின் தாழ்வரையைத் தொட்டு உறுதி மொழிந்ததைப் பரிபாடல் சொல்லும். மாடுபிடிப்பவர் கையடித்தல் உண்டு. சக்கை வைத்தல், நீர்வார்த்தல் என்பனவும் கையடித்தல் போல்வனவே.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்