சொல் பொருள்
கையாள் – குறிப்பறிந்து செய்பவன்.
சொல் பொருள் விளக்கம்
கைகாரனாக இருப்பவன் தனக்குக் கையாள் வைத்திருப்பது வழக்கம். கைகாரன் என்ன நினைக்கிறானோ அந்நினைப்பைக் குறிப்பாலேயே அறிந்து செயலாற்றுவதில் தேர்ந்தவன் கையாள் ஆவான். அவன் எதிர்காலத்தில் கைகாரனாக விளங்கத்தக்கவனாவான். கையாள் ஏவலன் அல்லன். அவன் ஏவிச் செய்பவன், முறையான பணியாளன், இவன் சூழ்ச்சியாளனுக்கும் வன்படியாளனுக்கும் துணையாக நிற்பவன். எச்சிறு செயலும். எத்தீச்செயலும் உடன்படும் உள்ளத்தனே இக் கையாளனாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்