வழக்குச் சொல்

வாங்கு

சொல் பொருள் வாங்கு என்பது வளைந்த கத்தி கட்டப்பட்ட தொரட்டி (தோட்டி) சொல் பொருள் விளக்கம் வாங்கு என்பது வளைவுப் பொருளது. வாங்கு பிடித்தல் என்பது கணைகளுக்கு வளையம் போடுதலாகும். வாங்கு என்பது வளைந்த… Read More »வாங்கு

வாங்கியிருத்தல்

சொல் பொருள் தள்ளி இருத்தல் வாங்கி இருத்தல் உள்வாங்கி இடம்விட்டு இருக்கச் செய்தலாம். சொல் பொருள் விளக்கம் நெருங்கலாக அமர்ந்திருக்கும்போது அந்நெருக்கத்தைத் தளர்த்தும் வகையால் அகன்று அல்லது தள்ளியிருக்கச் சொல்வது வழக்கம். அகத்தீசுவர வட்டாரத்தில்… Read More »வாங்கியிருத்தல்

வாங்கி

சொல் பொருள் நிலையின் மேல் போடப்பட்ட பலகை வாங்குதல், தாங்குதல், இரண்டும் பொருள் வைக்கும் தட்டு என்னும் பொருளில் வழங்குவனவாம். சொல் பொருள் விளக்கம் ‘வாங்கி’ என்பது எச்சம் போல் தெரிந்தாலும் வாங்குதல், வளைதல்… Read More »வாங்கி

வற்றல்

சொல் பொருள் உலர்ந்து போன மிளகாய், சுண்டை, மெதுக்கு, வெண்டை, அவரை வற்றல்கள் பொது வழக்கானவை மெலிந்து எலும்பும் தோலுமாக இருப்பவரை வற்றல் என்பது முகவை நெல்லை வழக்கு சொல் பொருள் விளக்கம் உலர்ந்து… Read More »வற்றல்

வளையம்

சொல் பொருள் முறை, தடவை சொல் பொருள் விளக்கம் வளையம் என்பது வளைவான பொருளைக் குறித்தல் பொது வழக்கு. வளையம் (வட்டம்) சுற்றிவருதல் எண்ணிக் கணக்கிடுதல் போட்டி வகைகளுள் ஒன்று. அதன் வழியே வளையம்… Read More »வளையம்

வளவு

சொல் பொருள் வேலி சொல் பொருள் விளக்கம் மனை அல்லது நிலம் என்பவற்றின் எல்லை காட்டும் வகையில் வேலியிடுதல் வழக்கம். உயிர்வேலி எனினும் கல், மண் முதலிய சுவர் வேலியாயினும் இடுவர். வேலி என்னும்… Read More »வளவு

வளர்த்தம்மை

சொல் பொருள் தாயைப் பெற்ற அல்லது தந்தையைப் பெற்ற பாட்டியாவார் சொல் பொருள் விளக்கம் பெற்றோர் இருக்கும் போதும் அவரைப் பெற்றோர் இருப்பார் எனின் அவர் குழந்தைகளைப் பேணி வளர்ப்பதே பெரும்பாலான குடும்ப வழக்கம்.… Read More »வளர்த்தம்மை

வளசு

சொல் பொருள் வளையல் சொல் பொருள் விளக்கம் வளைவு என்னும் வடிவப் பெயரால் ஏற்பட்ட பெயர் வளையல். அதனை ‘வளசு’ என்பது பரதவர் வழக்காக உள்ளது. இளையது > இளைசு > இளசு ஆவது… Read More »வளசு

வள்ளிசு

சொல் பொருள் மொத்தமாக, ஒன்று விடாமல் சொல் பொருள் விளக்கம் “அவன் வள்ளிசாக அள்ளிக் கொண்டு போய்விட்டான்” என்பர். வள்ளிசு என்பது மொத்தமாக, ஒன்று விடாமல் என்னும் பொருளது. வளமாக – ஏராளமாக –… Read More »வள்ளிசு

வழிக்காசு

சொல் பொருள் போக்குவரவுக் காசு, வழிச் செலவு பயணப்படி சொல் பொருள் விளக்கம் போக்குவரவுக் காசு, வழிச் செலவுக் காசு என்பதை ஏலக்காய்த் தோட்டத்தார் வழிக்காசு என்கின்றனர். ‘பயணப்படி’ என்பதை ‘வழிக்காசு’ ‘வழிச் செலவு’… Read More »வழிக்காசு