Skip to content
குமிழ்

குமிழ் என்பதுஒரு மரம்

1. சொல் பொருள்

(பெ) ஒரு மரம்

2. சொல் பொருள் விளக்கம்

ஜெர்மானிய அறவியல் அறிஞர் ஜோணன் ஜார்ஜ் மேலின் என்பவரை நினைவூட்டும் வகையில் மெலினா என்ற முதற்பெயர் அமைந்துள்ளது. ஆர்போரியா என்பது மரத்தை போன்றது எனப் பொருளாகும். இது, ஆணிவேர் தாவரம் என்பதால், பக்கவேர்கள் அதிகமாக வளராது. குமிழ்மரத்தின் இலை, தழைகள், கால்நடைகளுக்கு நல்ல தீவனமாகும்.குமிழ் மரம் தீப்பெட்டி, தீக்குச்சி, ஒட்டு பலகை மற்றும் மரக்கூழ் தயாரிக்கவும் பயன்படுகிறது. மேலும் நாற்காலிகள், ஜன்னல்கள், நிலைக்கதவுகள், பலகைகள், பெட்டிகள் மற்றும் தோலக் என்ற இசைக்கருவி செய்ய குமிழ்மரம் பயன்படுகிறது. 

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

gmelina arborea

குமிழ்
குமிழ்

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

குமிழ் என் கிளவி மரப்பெயர் ஆயின் - எழுத். புள்.மயங்:91/1

குமிழ் தலைமயங்கிய குறும் பல் அத்தம் – நற் 274/5

குமிழ மரங்கள் செறிந்துவளர்ந்த, சிறிதானவும் பலவானதுமான வழிகளில்

குமிழ் தலைமயங்கிய குறும் பல் அத்தம் - நற் 274/5

குமிழ் உண் வெள்ளை பகு வாய் பெயர்த்த - புறம் 324/9

கான குமிழின் கனி நிறம் கடுப்ப - சிறு 225

இன் தீம் பாலை முனையின் குமிழின்/புழல் கோட்டு தொடுத்த மரல் புரி நரம்பின் - பெரும் 180,181

அத்த குமிழின் கொடு மூக்கு விளை கனி - நற் 6/7

அத்த குமிழின் ஆய் இதழ் அலரி - நற் 286/2

குமிழ் முலை சீதை கொண்கண் கோ_முடி புனைதல் காண்பான் - அயோ:3 71/3

குயில் மொழி கலச கொங்கை மின் இடை குமிழ் ஏர் மூக்கின் - கிட்:11 76/3

குமிழ் மூக்கு இவை காண் உமிழ் சீ ஒழுக்குவ - மணி:20/48

இடை குமிழ் எறிந்து கடை குழை ஓட்டி - புகார்:4/69

இரு கரும் கயலோடு இடை குமிழ் எழுதி - புகார்:5/205

கரு நெடும் குவளையும் குமிழும் பூத்து ஆங்கு - புகார்:5/215

குவளையும் குமிழும் கொவ்வையும் கொண்ட - புகார்:8/75

குழை மேல் எறியும் குமிழ் மேல் மறியும் - வத்தவ:12/255

எங்கும் உள பைம் குமிழ்கள் எங்கும் உள செங்குமுதம் எங்கும் உள செங்கயல்களே - கலிங்:295/2

உற பசந்த செம் குமிழ் கிளி இனத்தொடும் ஒழுங்காய் - சீறா:1114/3

குறைதரா வாசம் கமழ்வது மாறா குமிழின் நீர் சிறிதுமே அணுகா - சீறா:370/3

முட்டி வீழ்ந்தனன் குமிழினும் வாயினும் முழு பெருக்கு என சோரி - சீறா:674/3

வள்ளையை கிழித்து குமிழினை துரந்த மதர் விழிக்கு அஞ்சனம் எழுதி - சீறா:1203/1

எள்ளையும் சிறந்த குமிழையும் வாசத்து இனிய சண்பகமலர்-தனையும் - சீறா:1959/3

இரு குழை எறிந்த கெண்டைகள் ஒரு குமிழ் அடர்ந்து வந்திட இணை சிலை நெரிந்து எழுந்திட அணை மீதே - திருப்:32/1

வாய் இதழ் பொற்க மலர் குமிழ் ஒத்து உளதுண்ட க்ரீவ - திருப்:234/2

குமிழ் நாசியின் முகமோ மதியாம் குளிர் சேம் கமலம் - திருப்:427/7

மச்ச பொன் கணை முக்கு பொன் குமிழ் ஒப்ப கத்தரி ஒத்திட்ட செவி - திருப்:512/2

தேன் உலாவிய மா மொழி மேரு நேர் இள மா முலை சேல் உலாவிய கூர் விழி குமிழ் நாசி - திருப்:712/2

வண் பயிலும் குவடு ஆண்ட மார் முலையின் பொறி அம் குமிழ் ஆம்பல் தோள் கர - திருப்:763/3

சங்கு நல் குமிழ் தரளமும் எழில் பெறு துங்க ஒண் பணி மணிகளும் வெயில் விடு - திருப்:770/15

மகரம் அது கெட இரு குமிழ் அடைசி வார் ஆர் சரங்கள் என நீளும் - திருப்:820/1

பரிய குமிழ் அறுகு கன தும்பையும் செம்பையும் துன்று மூல - திருப்:860/4

முட்டி இலகு குமிழ் தாவி காமன் விட்ட தனை ஓடி சாடி - திருப்:1023/5

குரு வளர் பூம் குமிழ் கோங்கு பைம் காந்தள் கொண்டு ஓங்கு தெய்வ - திருக்கோ:1/2
குமிழ்
குமிழ்மரம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *