Skip to content

அ வரிசைச் சொற்கள்

அ வரிசைச் சொற்கள், அ வரிசைத் தமிழ்ச் சொற்கள், அ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், அ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

அறிகுறி

சொல் பொருள் அறி – ஒலி, மணம் முதலியவற்றால் அறியும் அடையாளம்.குறி – தோற்றத்தால் அல்லது உருவால் அறியும் அடையாளம். சொல் பொருள் விளக்கம் “வண்டி வரும் அறிகுறியே இல்லையே” என நெடுநேரம் வண்டிக்குக்… Read More »அறிகுறி

அற்றை(அத்தை)ப் பட்டினி அரைப்பட்டினி

சொல் பொருள் அற்றைப்பட்டினி – ஒவ்வொரு நாளும் ஒரு வேளையோ இரு வேளையோ சோற்றுக்கு இல்லாமல் பட்டினி கிடத்தல் .அரைப்பட்டினி – ஒவ்வொரு வேளையும் வயிறார உண்ண வழியின்றி அரை வயிறும் குறைவயிறுமாகக் கிடத்தல்.… Read More »அற்றை(அத்தை)ப் பட்டினி அரைப்பட்டினி

அற்றதுஅலைந்தது

சொல் பொருள் அற்றது – எவர் துணையும் அற்றவர்.அலைந்தது – ஓரிடம் நிலைப்பற்றது அலைந்து திரிபவர். சொல் பொருள் விளக்கம் “அற்றது அலைந்ததுக் கெல்லாம் இந்த வீடு தானா கிடைத்தது” எனச் சலித்துக் கொள்ளுவார்… Read More »அற்றதுஅலைந்தது

அள்ளி முள்ளி

சொல் பொருள் அள்ளுதல் – கை கொள்ளுமளவு எடுத்தல்முள்ளுதல் – விரல் நுனிபட அதனளவு எடுத்தல். சொல் பொருள் விளக்கம் தருதல் வகையுள் அள்ளித் தருதலும், முள்ளித் தருதலும் உண்டு. தருவார் மனநிலையும், கொள்வார்க்கும்… Read More »அள்ளி முள்ளி

அள்ளக்கொள்ள

சொல் பொருள் அள்ள – பரவிக் கிடப்பதைக் கூட்டி அள்ளுதற்கு.கொள்ள – கூட்டி அள்ளியதைக் கொண்டு போதற்கு. சொல் பொருள் விளக்கம் “அள்ளக் கொள்ள ஆள் வேண்டும்” என்று களத்து வேலைக்கு ஆள் தேடுவர்… Read More »அள்ளக்கொள்ள

அழுதுஅரற்றுதல்

சொல் பொருள் அழுதல் – கண்ணீர் விட்டு கலங்குதல்அரற்றுதல் – வாய் விட்டுப் புலம்புதல். சொல் பொருள் விளக்கம் அழுது வடிதல், அழுது வழிதல் என்பவை வழக்கு. அழுகைக் கண்ணீர் என்பார் அருஞ்சொல் உரையாசிரியர்… Read More »அழுதுஅரற்றுதல்

அலை கொலை

சொல் பொருள் அலை – அலைத்தலாம் துன்புறுத்துதல்கொலை – கொல்லுதல் சொல் பொருள் விளக்கம் இனிப் புலை கொலை என்பது புலால் உண்ணுதலையும், கொலை என்பது கொல்லுதலையும் குறிக்கும். அலையாவது அலை கிளர்வது போல்… Read More »அலை கொலை

அலுப்பும் சலிப்பும்

சொல் பொருள் அலுப்பு – உடலில் உண்டாகும் வலியும் குத்தும் குடைவும் இழுப்பும் பிறவும்.சலிப்பு – உள்ளத்தில் உண்டாகும் வெறுப்பும் சோர்வும் நோவும் பிறவும். சொல் பொருள் விளக்கம் அலங்குதல், அலுங்குதல் – அசைதல்;… Read More »அலுப்பும் சலிப்பும்

அலுங்காமல் நலுங்காமல்

சொல் பொருள் அலுங்காமல் – அசையாமல்நலுங்காமல் – ஆடாமல் சொல் பொருள் விளக்கம் அலுங்குதல் நிகழ்ந்த பின்னே, நலுங்குதல் நிகழும். தட்டான்கல் அல்லது சொட்டான்கல் ஆட்டத்தில் ஒரு கல்லை எடுக்கும் போது விரல் இன்னொரு… Read More »அலுங்காமல் நலுங்காமல்

அல்லுச்சில்லு

சொல் பொருள் அல்லு – அல்லலைத் தரும் பெருங்கடன்.சில்லு – சிறிது சிறிதாக வாங்கிய சில்லறைக் கடன். சொல் பொருள் விளக்கம் “அல்லுச் சில்லு இல்லாமல் கணக்கைத் தீர்த்துவிட்டேன்” என்று மகிழ்வுடன் கூறுபவர் உரையைக்… Read More »அல்லுச்சில்லு