Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

அரைவேக்காடு

சொல் பொருள் அரைவேக்காடு – பதனற்ற அல்லது பக்குவமற்ற நிலைமை. சொல் பொருள் விளக்கம் வேக வைத்தல் பக்குவப் படுத்துதலாம். ‘சமையல்’ என்பதும், ‘சமயம்’ என்பதும் பக்குவப்படுத்துதல் பொருளவே. வேக்காடு முழுமையாக இருத்தல், வேண்டும்… Read More »அரைவேக்காடு

அரைத்தல்

சொல் பொருள் அரைத்தல் – தின்னுதல் சொல் பொருள் விளக்கம் ஓயாமல் ஒழியாமல் தின்று கொண்டிருப்பதை ‘அரைத் தல்’ என்பது வழக்கு. ‘அரைவை நடக்கிறது போலிருக்கிறதே’ என்பதும் அரைவையாளியிடம் நகைப்பாகக் கேட்கும் கேள்வி. அரைத்தல்… Read More »அரைத்தல்

அரிப்பெடுத்தல்

சொல் பொருள் அரிப்பெடுத்தல் – சினமுண்டாதல், பால்வெறியுண்டாதல் சொல் பொருள் விளக்கம் அரிப்பு என்பது ஊறல், வியர்க்குறு, வெப்பு இவற்றால் தோலில் பொரியுண்டாகும் போது, அதனால் தினவுண்டாவது அரிப்பு எனப்படும். செந்தட்டி, தட்டுப்பலா முதலிய… Read More »அரிப்பெடுத்தல்

அரித்தெடுத்தல்

சொல் பொருள் அரித்தெடுத்தல் – முயன்று வாங்குதல் சொல் பொருள் விளக்கம் அரிப்பெடுத்தல் வேறு; அரித்தெடுத்தல் வேறு. பொற்கொல்லர் பணிக்குப் பயன்படுத்திய கரித்துகளைக் கூடைக் கணக்கில் விலைக்கு விற்பது வழக்கம். அதனை வாங்கியவர்கள் கரியைச்… Read More »அரித்தெடுத்தல்

அரவணைத்தல்

சொல் பொருள் அரவணைத்தல் – அன்பு சொரிதல் முதலாவது ஒருவரை ஒருவர் உடலால் கட்டித் தழுவுவதையும் பின்னர் உள்ளத்தால் ஒன்றித் தழுவுவதையும் அன்பாகப் பேணிக் காத்தலையும் குறிக்க அரவணைத்தல் என்னும் வழக்கு எழுந்தது. சொல்… Read More »அரவணைத்தல்

அம்போ என விடுதல்

சொல் பொருள் அம்போ என விடுதல் – தனித்துக் கைவிடல் சொல் பொருள் விளக்கம் ‘அம்போ’ என்பது அம்மோ, ஐயோ என்பன போலத் தனித்து அரற்றல், துணை என்று நின்றவன், தீரா இடையூறு அல்லது… Read More »அம்போ என விடுதல்

அடைத்துக் கொள்ளல்

சொல் பொருள் அடைத்துக் கொள்ளல் – இருமலமும் வெளிப்படாமை சொல் பொருள் விளக்கம் வெளிப்படாமல் மூடிவைப்பதை அடைத்தல் என்பது வழக்கு, கதவடைப்பு, சிறையடைப்பு, தட்டியடைப்பு, பெட்டி யடைப்பு என்பவற்றைக் கருதுக. ஒருவர் அடைக்காமல், தானே… Read More »அடைத்துக் கொள்ளல்

அடைகாத்தல்

சொல் பொருள் அடைகாத்தல் – வெளிப்போகாது வீட்டுள் இருத்தல் சொல் பொருள் விளக்கம் கோழி முட்டையிட்டு இருபத்தொருநாள் அடை கிடக்கும். அடைவைத்த நாளில் இருந்து எண்ணிக் கொள்ளலாம். குஞ்சுபொரித்து வெளிப்படும் வரை அடை காக்கும்… Read More »அடைகாத்தல்

அடுப்பில் பூனை கிண்டுதல்

சொல் பொருள் அடுப்பில் பூனை கிண்டுதல் – சமைக்கவும் இயலா வறுமை சொல் பொருள் விளக்கம் பூனை அழகு உயிரியாக மேலை நாட்டில் வளர்ப்பது உண்டாயினும், அப்பழக்கத்தை மேற்கொள்ளும் நம்நாட்டாரும் அதற்காக வளர்ப்பது உண்டாயினும்,… Read More »அடுப்பில் பூனை கிண்டுதல்

அடுப்பில் காளான் பூத்தல்

சொல் பொருள் அடுப்பில் காளான் பூத்தல் – சமைக்கவும் இயலா வறுமை சொல் பொருள் விளக்கம் ஆம்பி, காளாம்பி, காளான் என்பன ஒரு பொருளன. காளான் குப்பையில் பெரிதும் உண்டாகும். ஆதலால் ‘குப்பைக் காளான்’… Read More »அடுப்பில் காளான் பூத்தல்