Skip to content

இணைச் சொல்

இணைச் சொல்லைப் பிரித்துத் தனித்துப் பார்ப்பினும் அச்சொல்லுக்குப் பொருள் உண்டு. இனணச் சொல் என்பது தனிச்சொல்லாக நிற்பினும் நிற்கவும், இணைச்சொல்லாக நிற்பினும் நிற்கவும் இயைந்ததன்மையதாம்

அரக்கப்பரக்கவிழித்தல்

சொல் பொருள் அரக்கல் – முகம் கண் கால் கை முதலியவற்றைத் தேய்த்தல்.பரக்கல் – சுற்றும் முற்றும் திருதிருவென அகல விழித்தல். சொல் பொருள் விளக்கம் குழந்தை அழும்போதும் அச்சத்தால் ஒருவர் மருளும் போதும்… Read More »அரக்கப்பரக்கவிழித்தல்

அப்புறக்குப்புற

சொல் பொருள் அப்புற(ம்) – முகம் மேல் நோக்கி இருத்தல்குப்புற(ம்) – முகம் கீழ்நோக்கி இருத்தல். சொல் பொருள் விளக்கம் குழந்தையை மல்லாக்கப் படுக்கப் போட்டால் உடனே புரண்டு குப்புறப் படுத்துக்கொள்வதுண்டு. அதனை ‘அப்பறக்குப்பற’… Read More »அப்புறக்குப்புற

அந்திசந்தி

சொல் பொருள் அந்தி – மாலைக்கும் இரவுக்கும் இடைப்படுபொழுது.சந்தி – காலைக்கும் இரவுக்கும் இடைப்படுபொழுது. சொல் பொருள் விளக்கம் மாலைக்கடை அந்திக்கடை எனப்படும். சில ஊர்களில் அந்திக்கடைத் தெரு, அந்திக்கடைப் பொட்டல் என்னும் பெயர்கள்… Read More »அந்திசந்தி

அதரப்பதற

சொல் பொருள் அதரல் – நடுக்கமுறல்பதறல் – நாடி, துடி மிகல். சொல் பொருள் விளக்கம் அதிர்வு-நடுக்கம்; அச்சம் உண்டாய போது உடல் நடுக்கமும் உள நடுக்கமும் ஒருங்கே உண்டாம். உளநடுக்கத்தால் உரைநடுக்கமும் மேலெழும்.… Read More »அதரப்பதற

அண்டியவர் அடுத்தவர்

சொல் பொருள் அண்டை – தன் வீட்டை அண்டி (நெருங்கி) இருக்கும் வீட்டார்அயல் – அண்டை வீட்டுக்கு அடுத்திருக்கும் வீட்டார்.அண் – நெருக்கம்; அணுக்கம்-நெருக்கம்; அணுக்கர்- நண்பர்; அணிமை – அண்மை, இவற்றால் அண்டை… Read More »அண்டியவர் அடுத்தவர்

அண்டைஅயல்

சொல் பொருள் அண்டை – தன் வீட்டை அண்டி (நெருங்கி) இருக்கும் வீட்டார்அயல் – அண்டை வீட்டுக்கு அடுத்திருக்கும் வீட்டார்.அண் – நெருக்கம்; அணுக்கம்-நெருக்கம்; அணுக்கர்- நண்பர்; அணிமை – அண்மை, இவற்றால் அண்டை… Read More »அண்டைஅயல்

அண்டாகுண்டா

சொல் பொருள் அண்டா – மிகுதியான அளவில் சோறாக்குதற்குப் பயன்படுத்தும் வெண்கல ஏனம்; கொப்பரை என்பதும் அது.குண்டா – அண்டாவில் ஆக்கப்பெற்ற சோற்றை அள்ளிப்போட்டுப் பந்தியில் பரிமாறுதற்குப் பயன்படுத்தும் ஏனம். சொல் பொருள் விளக்கம்… Read More »அண்டாகுண்டா

அடுப்பும் துடுப்பும்

சொல் பொருள் அடுப்பு – அடுப்பு வேலைதுடுப்பு – அடுப்பு வேலையுடன் செய்யும் துடுப்பு வேலை, களி அல்லது கூழ் கிண்டும் வேலை. சொல் பொருள் விளக்கம் அடுப்பில் இருக்கும், உலையின் கொதிநிலையறிந்து, அதில்… Read More »அடுப்பும் துடுப்பும்

அடுத்தும் தொடுத்தும்

சொல் பொருள் அடுத்தல் – இடைவெளிப்படுதல்தொடுத்தல் – இடைவெளிப்படாமை. சொல் பொருள் விளக்கம் அண்டை வீடு, அடுத்தவீடு என்பதையும், அண்டியவர் அடுத்தவர் என்பதையும் கொண்டு அடுத்தல் பொருளை அறிக. தொடர், தொடர்ச்சி, தொடர்பு, தொடலை,… Read More »அடுத்தும் தொடுத்தும்

அடியோலை அச்சோலை

சொல் பொருள் அடியோலை- முதற்கண் எழுதப்பட்ட ஓலை அல்லது மூல ஓலை.அச்சோலை – மூல ஓலையைப் பார்த்து எழுதப்பட்ட படியோலை. சொல் பொருள் விளக்கம் அடிமனை, அடிப்பத்திரம் என்பவற்றில் உள்ள அடி மூலமாதல் தெளிவிக்கும்.… Read More »அடியோலை அச்சோலை