Skip to content

admin

ஊரணி

சொல் பொருள் ஊருக்கு அணித்தானமையின் பொய்கையை ஊரணி என்று கூறுதலும், ஊரினரால் உண்ணப்படும் தகுதியுடைய நீர்நிலையை ஊருணி என்று கூறுதலும் வழக்கென்று கொள்ளுதலும் பொருந்தும் சொல் பொருள் விளக்கம் ஊருக்கு அணித்தானமையின் பொய்கையை ஊரணி… Read More »ஊரணி

ஊர்கோடல்

சொல் பொருள் விளக்கம் குறைவின்றி மண்டலமாக ஒளிபரத்தல்; அல்லதூஉம் பரிவேடித்தல் எனினும் அமையும். (திருக்கோ. 262. பேரா.)

ஊடல்

சொல் பொருள் உள்ளத்து நிகழ்ந்ததனைக் குறிப்பு மொழியான் அன்றி கூற்றுமொழியான் உரைப்பது சொல் பொருள் விளக்கம் (1) ஊடல் என்பது, உள்ளத்து நிகழ்ந்ததனைக் குறிப்பு மொழியான் அன்றி கூற்றுமொழியான் உரைப்பது.(தொல். பொருள். 499. பேரா.)… Read More »ஊடல்

ஊசிமுறி

சொல் பொருள் விளக்கம் ஊசிமுறி என்னும் பெயர், எழுதுங்காலத்தில் எழுத்தாணியால் எழுத முடியாத ஓசையையுடைய செய்யுட் களையுடைமையாற் பெற்ற காரணப்பெயர். (சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும். 39.)

ஊக்கமுடைமை

சொல் பொருள் விளக்கம் அஃதாவது மனம் மெலிதல் இன்றி வினை செய்வதற்கண் கிளர்ச்சி உடைத்தாதல். (திருக். ஊக்கமுடைமை. பரி.)

ஊக்கம்

சொல் பொருள் விளக்கம் ஊக்கம் என்பது உள்ளமானது மேம்படக் கருதும் மேற்கோள் என்றவாறு. (திருக். 382. காலிங்)

உறைக்கிணறு

சொல் பொருள் உறைகளை நிலத்தை அகழ்ந்து ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிச் செய்வது உறைக் கிணறு சொல் பொருள் விளக்கம் உறை என்பது மண்ணாற் சுவர்போற் சூழவனைந்து ஓரடிக்கு மேல் உயரமாக்கிச் சுள்ளையில் வைத்துச் சுட்டு… Read More »உறைக்கிணறு

உறுப்பறை

சொல் பொருள் சொல் பொருள் விளக்கம் உறுப்பறை என்பது கைகுறைத்தலும் கண் குறைத்தலும் முதலாயின. (தொல். பொருள். 258. பேரா.)

உளைப்பூ

சொல் பொருள் விளக்கம் மகரந்தத் தூள்கள் நிறைந்து வெளியே துய் போல் இருப்பதையே உளைப்பூ என்ற சொல் உணர்த்துகிறது. (சங்க இலக்கியத்தில் செடி கொடி விளக்கம். 45.)