Skip to content

இ வரிசைச் சொற்கள்

இ வரிசைச் சொற்கள், இ வரிசைத் தமிழ்ச் சொற்கள், இ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், இ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

இன்சொல்

சொல் பொருள் கேள்வியினும் வினையினும் இனியவாய சொல். சொல் பொருள் விளக்கம் இன்சொல்: கேள்வியினும் வினையினும் இனியவாய சொல். (திருக். 387. பரி.)

இறைவன்

சொல் பொருள் ‘எப்பொருளினும் தங்குகின்றவன்’ சொல் பொருள் விளக்கம் ‘எப்பொருளினும் தங்குகின்றவன்’ என்று பொருளுரைப்பர் அடியார்க்கு நல்லார் (சிலம்பு. நாடுகாண். 184) ‘இறுத்தல்’ தங்குதல் என்னும் பொருட்டாதல் “மல்லன் மூதூர் மாலைவந் திறுத்தென” என்பதனுள்ளும்… Read More »இறைவன்

இறையிலி

சொல் பொருள் வரி விதிக்கப் பெறாமல் ஒதுக்கப் பெற்ற நிலம் இறையிலி எனப்படும். சொல் பொருள் விளக்கம் வரி விதிக்கப் பெறாமல் ஒதுக்கப் பெற்ற நிலம் இறையிலி எனப்படும். சைவ வைணவத் திருக்கோயில்களுக்கு இறையிலியாக… Read More »இறையிலி

இறுவி

சொல் பொருள் கதிர் கொய்த தட்டை சொல் பொருள் விளக்கம் இறுவி என்பது கதிர் கொய்த தட்டை. (திருக்கோ. 144. பேரா.)

இறுமாத்தல்

சொல் பொருள் தாழாத உள்ளத்தராய்ச் செம்மாத்தல் சொல் பொருள் விளக்கம் தாழாத உள்ளத்தராய்ச் செம்மாத்தல். (திருக்கோ. 242. பேரா.)

இறத்தல்

சொல் பொருள் இறத்தல் என்பது கடத்தல். கூரையில் சுவரைக் கடந்து நிற்கும் பகுதிக்கு அது பெயர். யாவற்றிற்கும் உறைவிடமாகிய முதல்வனிடத்திற்கு உயிர்கள் கடந்து போதலை சாதல் எனக் காட்டுவான் இறத்தல் என்று அதை விளம்பினர்.… Read More »இறத்தல்

இறகு

சொல் பொருள் தூவு, அல்லது தூவி பறவையின் உடம்பிலுள்ள சிறு தூவு; இறகு சிறகிலும் வாலிலுமுள்ள பெருந்தூவு. சொல் பொருள் விளக்கம் தூவு, அல்லது தூவி பறவையின் உடம்பிலுள்ள சிறு தூவு; இறகு சிறகிலும்… Read More »இறகு

இளங்காடு

சொல் பொருள் பசுக்கள் முதலியன மேயாமல் காக்கின்ற இளங்காடு சொல் பொருள் விளக்கம் பசுக்கள் முதலியன மேயாமல் காக்கின்ற இளங்காடு. (பெரும்பாண். 184 – 5. நச்)

இழுக்குதல்

சொல் பொருள் அடிப்படைப் பண்புக் கேடுகளில் ஒரு சிறிது சறுக்கியவர்கூட மெல்ல மெல்ல, படிப்படியாகவே, ஆனால் மீளா வகையில் கேடு நோக்கிச் சென்றழிவர் என்பதை இழுக்குதல் என்ற இத்தமிழ்ச்சொல் நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறது சொல்… Read More »இழுக்குதல்

இழவு

சொல் பொருள் தந்தையும் தாயும் முதலான சுற்றத்தாரையும் இன்பம் பயக்கும் நுகர்ச்சி முதலாயனவற்றையும் இழத்தல். சொல் பொருள் விளக்கம் இழவென்பது, தந்தையும் தாயும் முதலான சுற்றத்தாரையும் இன்பம் பயக்கும் நுகர்ச்சி முதலாயனவற்றையும் இழத்தல். (தொல்.… Read More »இழவு