Skip to content

இணைச் சொல்

இணைச் சொல்லைப் பிரித்துத் தனித்துப் பார்ப்பினும் அச்சொல்லுக்குப் பொருள் உண்டு. இனணச் சொல் என்பது தனிச்சொல்லாக நிற்பினும் நிற்கவும், இணைச்சொல்லாக நிற்பினும் நிற்கவும் இயைந்ததன்மையதாம்

உண்ணாமல் தின்னாமல்

சொல் பொருள் உண்ணுதல் – சோறு உட்கொளல்தின்னுதல் – காய்கறி, சிற்றுணவு (சிறுதீனி) ஆகியவற்றைத் தின்னுதல். சொல் பொருள் விளக்கம் “ உண்ணாமல் தின்னாமல் ஐயோவென்று போவான்” என்பதில் இவ்வினை மொழியாட்சி காண்க. உண்ணுதல்… Read More »உண்ணாமல் தின்னாமல்

இனம் கனம்

சொல் பொருள் இனம் – உற்றார் உறவினராகிய சுற்றப்பெருக்கம்.கனம் – வீடு நிலம் பணம் முதலாகிய பொருட்பெருக்கம். சொல் பொருள் விளக்கம் “இனம் கனம் இருந்தால் மதிப்பிருக்கும்” “மடியில் கனமில்லை; வழியில்லை பயமில்லை” என்னும்… Read More »இனம் கனம்

ஆள் அம்பு

சொல் பொருள் ஆள் – ஆள் துணைஅம்பு – அம்பு முதலிய கருவித் துணை. சொல் பொருள் விளக்கம் “ஆள் அம்பு அவனுக்கு நிரம்புவதுண்டு; அவனை நெருங்க முடியாது” “ அவனுக்கென்ன ஆள் அம்புக்குக்… Read More »ஆள் அம்பு

அழிந்து ஒழிந்து

சொல் பொருள் அழிந்து – கெட்டுப்போதல்ஒழிந்து – அற்றுப் போதல். சொல் பொருள் விளக்கம் “அழிந்து ஒழிந்து போனது;” “அழிந்தொழிந்து போக நேரம் வந்துவிட்டதா?” என்பவை வழக்கு மொழிகள். அழிதல், அழிந்துபடுவதும், அழிந்ததற்குச் சான்று… Read More »அழிந்து ஒழிந்து

அழன்று குழன்று

சொல் பொருள் அழன்று – எரிந்து, வெதும்பிகுழன்று – குழைந்து, கூழாகி சொல் பொருள் விளக்கம் அழலுதல் முதல் நிலை; குழன்று போதல் அதன் வளர் நிலை; சோறு, காய்கறி அனலால் அழலும்; அனலால்… Read More »அழன்று குழன்று

அரசல் புரசல்

சொல் பொருள் அரசல் – நேரே தன் செவியில் மெல்லெனப் படுதல்.புரசல் – பிறர் செவியில் பட்டு மீளத் தன் செவிக்கு வருதல். சொல் பொருள் விளக்கம் ‘அரசல் புரசலாக’ அந்தச் செய்தியை அறிந்தேன்… Read More »அரசல் புரசல்

வெள்ளை வெட்டை

சொல் பொருள் வெள்ளை – வெள்ளை நீர்வெட்டை – வெக்கை அல்லது வேக்காடு. சொல் பொருள் விளக்கம் ‘வெள்ளை வெட்டை’ என்பவை மகளிர் நோய்கள், வெள்ளை நீர் ஒழுக்கு வெள்ளையாம். இதன் முதிர்ச்சியால் வேக்காடு… Read More »வெள்ளை வெட்டை

வெள்ளையும் சொள்ளையும்

சொல் பொருள் வெள்ளை – வெளுத்த வேட்டி சட்டைசொள்ளை – வெளுத்த துண்டு சொல் பொருள் விளக்கம் ‘ஆடைபாதி ஆள் பாதி’ என்பது பழமொழி. மேலாடையின்றி அவை புகுந்தால் மதியார் என்பதொரு வழக்கம் உண்டு.… Read More »வெள்ளையும் சொள்ளையும்

வெட்டை வெளி

சொல் பொருள் வெட்டை – மேட்டுப்பாங்கான இடம்வெளி – அகன்று பரந்து திறவையான இடம் அல்லது திறந்த வெளி. சொல் பொருள் விளக்கம் ‘வெட்டை வெளி’ என வானத்தைச் சுட்டுவர். மேட்டுப் பாங்கான திறந்த… Read More »வெட்டை வெளி

வெட்டு விலக்கு

சொல் பொருள் வெட்டு – எதிர்த்தும் மறுத்தும் வெட்டிப் பேசுதல்.விலக்கு – எடுத்ததை மாற்றிப் பிறிதொன்றால் பேசி மறுத்தல். சொல் பொருள் விளக்கம் வெட்டு; விலக்கு இரண்டுமே மறுப்புரைகளே, எனினும் இரண்டற்கும் வேற்றுமை உண்டாம்.… Read More »வெட்டு விலக்கு