சொல் பொருள்
(பெ) 1. மார்பு, 2. விரிவு, 3. விசாலம், 4. பெரியதன்மை,
சொல் பொருள் விளக்கம்
1. மார்பு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
chest, width, extent expanse, greatness
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தண் தார் அகலம் வண்டு இமிர்பு ஊத – நற் 235/8 குளிர்ந்த மாலை அணிந்த மார்பினில் வண்டுகள் ஒலிப்புடன் தேனருந்த அணியொடு வந்து ஈங்கு எம் புதல்வனை கொள்ளாதி மணி புரை செம் வாய் நின் மார்பு அகலம் நனைப்பதால் – கலி 79/7,8 பரத்தையர் மனையில் அணிந்துகொண்ட அணியோடு வந்து இங்கு எம் புதல்வனை தூக்கிக்கொள்ளவேண்டாம், பவழம் போன்ற அவனது சிவந்த வாயிலிருந்து ஒழுகும் நீர் உன் அகன்ற மார்பை நனைப்பதால், நின் தோற்றமும் அகலமும் நீரின் உள – பரி 4/30 உனது வெளிப்பாடும், விசாலமும் கடலினிடத்தில் உள்ளன; போற்றார் பொறுத்தலும் சூழ்ச்சியது அகலமும் வலியும் தெறலும் அளியும் உடையோய் – புறம் 2/7,8 பகைவரைப் பொறுத்தலும், பொறுக்கமுடியாவிட்டால் அவரை அழிக்கச் சூழும் உசாவினது பெருமையும் மனவலியும், அவரை அழித்தலும், அவருக்கு அருள் செய்யும் அருளும் உடையோய்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்