Skip to content

சொல் பொருள்

(பெ) அகன்ற உள்புறமுள்ள வீடு, ஊர்,

சொல் பொருள் விளக்கம்

அகன்ற உள்புறமுள்ள வீடு, ஊர்,

கிராமப்புறத்து வீடுகளில் சில, அகன்ற வெளியில் நான்குபக்கங்களிலும் சுவர் எழுப்பி அறைகளோ வேறு மாட்டுக்கொட்டில், தீவனம் வைக்குமிடம் போன்ற அமைப்புகளைக் கட்டி, நடுவில் திறந்த வெளி உள்ளவைகளாக இருக்கும். இப்படிப்பட்ட வீடுகள் அகலுள் எனப்படும். அதாவது அகன்ற உட்புறத்தைக் கொண்டது என்ற பொருள்தரும். சில கிராமங்களில் நடுவே அகன்ற வெளியைவிட்டு, அதனைச் சுற்றிலும் தெருக்களும், வீடுகளும் அமைப்பார்கள். அப்படிப்பட்ட ஊர் அகலுள் எனப்படும்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

a house or a village in which there is a broad open space in the middle

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அகலுள் ஆங்கண் கழி மிடைந்து இயற்றிய
புல்வேய்க் குரம்பைக் குடிதொறும் பெறுகுவிர் – மலை 438, 439

அகன்ற உள்ளிடத்தையுடைய ஊர்களில் கழிகளால் செறிந்து பண்ணின
புல்லால் வேய்ந்த குடில்களில் இருக்கும் குடிகளிடந்தோறும் பெறுவீர்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *