சொல் பொருள்
1. (வி) தோண்டு, 2. (பெ) 1. பள்ளம், 2. அகழி, கோட்டை மதிலைச் சூழ்ந்த கிடங்கு,
அகழ் : அகழப்படுதலின் அகழ் என்றது ஆகுபெயர். (பெரும்பாணாற்றுப்படை 107-8.)
சொல் பொருள் விளக்கம்
தோண்டு,
அகழப்படுதலின் அகழென்றது ஆகுபெயர்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
dig up, excavate, ditch, moat
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மலை அகழ்க்குவனே கடல் தூர்க்குவனே – பட் 271 மலைகளைத் தோண்டி மட்டப்படுத்துவான், கடல்களையெல்லாம் தூர்ப்பான் உடும்பு கொலீஇ வரி நுணல் அகழ்ந்து – நற் 59/1 உடும்பைக் கொன்று எடுத்துக்கொண்டு, வரிகளையுடைய தேரையை மணலைத் தோண்டி எடுத்துக்கொண்டு வான் மடி பொழுதில் நீர் நசைஇ குழித்த அகழ் சூழ் பயம்பின் அகத்து ஒளித்து ஒடுங்கி – பெரும்பாணாற்றுப்படை 107,108 மழை பெய்யாதிருக்கும் காலத்தில் நீரை விரும்பித் தோண்டிய பள்ளங்களைச் சூழ்ந்த மூடுகுழிகளின் அகத்தே மறைந்து ஒதுங்கி, அகழ் இழிந்து அன்ன கான்யாற்று நடவை – மலை 214 அகழியில் இறங்குவது போன்ற, காட்டாற்று வழித்தடம் குறும்பு அடு குண்டு அகழ் நீள் மதில் ஊரே – புறம் 379/18 அரணை அடுத்த ஆழ்ந்த அகழியையும் நீண்ட மதிலையும் உடைய ஊர்க்கு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்