சொல் பொருள்
(பெ) ஒரு வேளிர் குல அரசன், மதுரையிலிருந்த ஓர் உபகாரி என்பார் உ.வே.சா.
சொல் பொருள் விளக்கம்
ஒரு வேளிர் குல அரசன், மதுரையிலிருந்த ஓர் உபகாரி என்பார் உ.வே.சா.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இந்த வேளிர் குல அரசன் வேள் மகளிரின் துன்பம் போக்கினான். பெருவிதுப்புற்ற பல்வேள் மகளிர் குரூஉப் பூம் பைந்தார் அருக்கிய பூசல் வசைவிடக்கடக்கும் வயங்கு பெருந்தானை அகுதை களைதந்து ஆங்கு – அகம் 208/15 – 18 மிக்க விரைவுகொண்டு வந்த பல வேளிர் மகளிர் நிறமுள்ள பூக்களாலான அழகிய மாலைகளை அழித்துவிட்டுச் செய்த அழுகை ஆரவாரத்தினை பழிநீங்க மாற்றார் படையினை வெல்லும் விளங்கும் பெரிய சேனையையுடைய அகுதை என்பவன் நீக்கினாற் போல – இன் கடும் கள்ளின் அகுதை தந்தை – குறு 298/5 இந்த அகுதை தந்தை என்பான் மேற்கூறப்பட்ட வேளிர்குலத் தலைவன். எனவே இதனை அகுதையாகிய தந்தை எனக்கொள்லலாம். சீர் கெழு நோன் தாள் அகுதைக்கண் தோன்றிய பொன்படு திகிரியின் பொய்யாயிகியர் – புறம் 233/3,4 சீர்மை பொருந்திய வலிய முயற்சியையுடைய அகுதையிடத்து உள்ளதாகிய பொன்னாற்செய்யப்பட்ட சக்கரத்தைப் போல் பொய்யாகுக மணம் நாறு மார்பின் மறப் போர் அகுதை குண்டு நீர் வரைப்பின் கூடல் அன்ன – புறம் 347/5,6 மணங்கமழும் மார்பினையுடைய மறம் பொருந்திய போரைச் செய்யும் ஆழ்ந்த நீர்நிலைகளையுடைய இடமாகிய கூடல் நகரைப் போன்று இங்கு குறிப்பிடப்படும் கூடல் என்பது காவிரி ஆற்ரங்கரையில் உள்ள முக்கூடல் என்ற ஊரைக் குறிக்கும் என்பர். பார்க்க – அஃதை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்