சொல் பொருள்
அக்கம் – அகத்தே அமைந்துள்ள நீர்
சொல் பொருள் விளக்கம்
புறத்தே புலப்படாமல் அகத்தே அமைந்துள்ள நீர் அக்கம் எனப்படும். தென்னை, பனை ஆகியவற்றின் உள்ளே இருந்து பாளையைச் சீவிவிடச் சொட்டுச் சொட்டாக உள்ளிருந்து வழியும் நீர் ‘அக்கானீர்’ என்று குமரி மாவட்ட வழக்கில் உள்ளது. அக்கம் என்பதைத் தண்ணீர் என்பது தஞ்சை வழக்கு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்