சொல் பொருள்
அசப்பில் தெரிதல் – ஒரு பார்வையில் தெரிதல்
சொல் பொருள் விளக்கம்
ஒருவரைப் போலவே ஒருவர் தோற்றம் அமைந்திருத்தல் உண்டு. அதிலும் கூர்ந்து நோக்காமல் மேலோட்டமாக நோக்கினால், அவரைப் போலவே இவரும் தோன்றுவார். அத் தகையரை அவராகப்பார்த்து ஏதோ சொல்ல வாயெடுப்பர்.
சொல்லியும் விடுவர். அவர்க்கோ இவர் யாரெனத் தெரியாமல் திகைப்புண்டாம். அந்நிலையை அறிந்து இவர் வேறொருவர் என்பதை ‘அசப்பிலே பார்த்தால் என் நண்பர் இன்னாரைப் போலத் தோற்றம் இருந்தது. அவரென்று நினைத்துக் கொண்டேன்; பொறுத்துக் கொள்ளுங்கள்” என்பர். இதில் அசப்பில் என்பது ஒரு பார்வையில் (ஒரு தோற்றத்தில்) என்னும் பொருள் தருகிறது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்