சொல் பொருள்
பனிக் காலம்
பார்க்க — அற்சிரம்
சொல் பொருள் விளக்கம்
அச்சிரம் என்பது மறைந்து போன சொற்களில் ஒன்று. இச் சொல்லுக்குப் பனிக் காலம் என்பது பொருள். இச்சொல் வேறு பொருளில் இக்காலத்தில் வழங்கி வருகிறது. வாயில் உண்டாகிற ஒருவித புண்ணுக்கு அச்சிரம் என்று பெயர் கூறப்படுகிறது. பனிக் காலத்தைக் குறிக்கும் அச்சிரம் என்னும் சொல் பனிக் காலத்தில் உண்டாகிய வாய்ப்புண் நோய்க்குப் பெயராயிற்று என்று தோன்றுகிறது. (அஞ்சிறைத்தும்பி. 130-131)
பார்க்க — அற்சிரம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தண் பனி வடந்தை அச்சிரம் முந்து வந்தனர் நம் காதலோரே – ஐங் 223/4,5 குளிர்ந்த பனியோடே சேர்ந்த வாடையுடன் கூடிய முன்பனிக்காலத்தையும் முந்திக்கொண்டு வந்துவிட்டார் நம் காதலர்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்