சொல் பொருள்
கருங்கல் பலகையைச் சாய்வாக முட்டுக்கொடுத்து நிறுத்தி, அதன் கீழே உணவு வைத்து விலங்குகளை அகப்படுத்தும் பொறி,
சொல் பொருள் விளக்கம்
கருங்கற் பலகையை ஒருபால் சாய்வாக நிமிர்த்திக் கீழே முட்டுக் கொடுத்து உள்ளால் உணவு வைப்ப அவ்வுணவை விலங்கு சென்று தொடுதலுங் கல் வீழ்யது கொல்லும் பொறி.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a trap for animals, placing a granite slab in a slanting position with a support
and placing food inside
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விளை புனம் நிழத்தலின் கேழல் அஞ்சி புழை-தொறும் மாட்டிய இரும் கல் அடாஅர் அரும் பொறி உடைய ஆறே – மலை 193-195 விளைந்த (தினைப்)புனத்தை (பன்றிகள்)சிறிது சிறிதாக அழித்து இல்லாமலாக்கிவிடுவதால், (அப்)பன்றிகளுக்குப் பயந்து, (அவை நுழையும்)ஒடுங்கிய வழிகள்தோறும் மாட்டிவைத்த பெரிய கல் பலகையால் செய்த அடார் (என்னும்)சிறந்த பொறிகளை உடையன வழிகள், தினை உண் கேழல் இரிய புனவன் சிறு பொறி மாட்டிய பெரும் கல் அடாஅர் ஒண் கேழ் வய புலி படூஉம் நாடன் – நற் 119/1-3 தினையை உண்ணும் காட்டுப்பன்றி வெருண்டு ஓட, தினைப்புனத்தான் சிறிய பொறியைப் பொருத்தி வைத்த பெரிய கல்லிலான சாய்வுப்பலகையில் ஒளிரும் நிறமுடைய வலிமையான புலி மாட்டிக்கொள்ளும் நாட்டைச் சேர்ந்தவன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்