சொல் பொருள்
(பெ) பார்க்க : அடுக்கம்
சொல் பொருள் விளக்கம்
பார்க்க : அடுக்கம்
மலைச்சரிவில் இருக்கும் சமவெளியை அடுக்கம் என்று கண்டோம்.
இந்த அடுக்கத்திலிருந்து நேர்க் குத்தாக மலைச்சரிவில் மேலே உயரச் செல்லும் பாதையைப் பற்றிச் சொல்கிறது மலைபடுகடாம்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அடுக்கல் மீமிசை அருப்பம் பேணாது இடிச்சுர நிவப்பின் இயவுக்கொண்டு ஒழுகி – மலை 19,20 அடுக்கலின் உயரத்தில் கடினம் என்று கொள்ளாது கல்லை இடித்த வழியின் உயர்ச்சியில் வழியைக்கொண்டு நடந்து மேலும் அடுக்கலில் உள்ள ஊருக்கு வெளியில் தினைப்புனங்கள் இருந்ததாக அறிகிறோம். கொடிச்சி காக்கும் அடுக்கல் பைம் தினை – நற் 22/1 அடுக்கல் நல் ஊர் அசை நடை கொடிச்சி – ஐங் 298/2 அடுக்கல் ஏனல் இரும் புனம் மறந்து_உழி – அகம் 348/10
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்