சொல் பொருள்
அடுப்பில் காளான் பூத்தல் – சமைக்கவும் இயலா வறுமை
சொல் பொருள் விளக்கம்
ஆம்பி, காளாம்பி, காளான் என்பன ஒரு பொருளன. காளான் குப்பையில் பெரிதும் உண்டாகும். ஆதலால் ‘குப்பைக் காளான்’ எனவும் படும். நல்ல மண்பதத்தில் மழைக் காலத்தில் தோன்றக் கூடிய காளான் சமையல் செய்யும் அடுப்பில் முளைத்ததென்றால் என்ன காரணம்?
பல நாள்கள் அடுப்பில் நெருப்பு மூட்டவில்லை. நெருப்பு எரிந்த கரியை அள்ளவில்லை. கூரை முகடு சிதைந்திருப்பதால் மழைநீர் வழிந்திருக்கிறது. ஆகவே ஆங்குக் காளான் தோன்றியிருக்கிறது என வறுமையின் உச்சத்தை காட்டுவதாம். அடுப்பில் பூனை கிண்டுதல் என்பதுவும் இது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்