சொல் பொருள்
அடைத்துக் கொள்ளல் – இருமலமும் வெளிப்படாமை
சொல் பொருள் விளக்கம்
வெளிப்படாமல் மூடிவைப்பதை அடைத்தல் என்பது வழக்கு, கதவடைப்பு, சிறையடைப்பு, தட்டியடைப்பு, பெட்டி யடைப்பு என்பவற்றைக் கருதுக. ஒருவர் அடைக்காமல், தானே அடைத்துக் கொள்ளும் சிறுநீர்க் கட்டு, மலக்கட்டு என்பவையும் அடைத்துக் கொள்ளலாகக் கூறப்படும். முன்னும் பின்னும் அடைத்துக் கொண்டது என்பதும் வழக்கே. குருதியோட்டத் தடைப்பாடு, மூச்சோட்டத் தடைப்பாடு என்பனவும் அடைத்துக் கொள்ளல் எனவும் வழங்கும் ‘மார்படைப்பு நோய்’ மிகப் பெருகிவருவது கண்கூடு. மார்பு அடைப்பு – மாரடைப்பு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்