சொல் பொருள்
அம்போ என விடுதல் – தனித்துக் கைவிடல்
சொல் பொருள் விளக்கம்
‘அம்போ’ என்பது அம்மோ, ஐயோ என்பன போலத் தனித்து அரற்றல், துணை என்று நின்றவன், தீரா இடையூறு அல்லது தாங்காத்துயர் நேர்ந்த காலையில் குறிப்பாகக் கூடச் சொல்லிக் கொள்ளாமல் ஒதுங்கிவிடுதல் (கைவிடுதல்) ‘அம்போ’ என விடுதலாம்.
துணை என நமக்கு உண்டு என்ற நம்பிக்கை இல்லா திருந்தால், தன் நிலைக்கு ஏற்றவாறு செயலில் இறங்கியிருக்கக் கூடியவனை, நம்பிக்கையூட்டி உரிய இக்கட்டான பொழுதில் தனித்து விடுதல் ஒன்றுக்குப் பத்தாம் அல்லலை விளைக்கும் அன்றோ! அவ்விரங்கத் தக்க நிலையே ‘அம்போ’ எனக் கைவிடலாயிற்று.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்