சொல் பொருள்
(வி) ஐயுறு
(பெ) 1. அயிர்ப்பு – ஐயம், 2. குறுமணல், நுண்ணிதான பொருள், 3. புகைக்கும் நறுமணப்பொருள்
சொல் பொருள் விளக்கம்
1. ஐயுறு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
suspect
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அரும் கடி வாயில் அயிராது புகுமின் – மலை 491 அரிய பாதுகாப்புள்ள வாயிலில் ஐயுறாமல் நுழையுங்கள் நெருநையும், அயிர்த்தன்றுமன்னே நெஞ்சம் – அகம் 315/5 நேற்றும் ஐயுற்றது நெஞ்சம் நிச்சயமாக பாணர், அயிர்ப்பு கொண்டு அன்ன கொன்றை அம் தீம் கனி பறை அறை கடிப்பின் அறை அறையாத் துயல்வர – நற் 46/6,7 பாணர் ஐயம் கொள்கின்றவாறு, கொன்றையின் அழகிய இனிய கனிகள் பறையை அடிக்கின்ற குறுந்தடிபோல் பாறையில் விழுமாறு ஆட அறு துறை அயிர் மணல் படுகரை போகி – அகம் 113/20 மக்கள் நடமாட்டம் அற்ற துறையாகிய நுண்மணல் பொருந்திய கரையினைத் தாண்டி அயிர் உருப்பு_உற்ற ஆடு அமை விசயம் – மது 625 கற்கண்டுத்தூளை வெப்பமேற்றி சமைத்த பூரணம் இரும் காழ் அகிலொடு வெள் அயிர் புகைப்ப – நெடு 56 கரிய வயிரம்பாய்ந்த அகிலோடு வெள்ளிய சாம்பிராணித்தூளையும் கூட்டிப் புகைப்ப
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்