சொல் பொருள்
1. (வி) உண், பருகு
2. (பெ) 1. இரும்பு, இரும்பினாலான கருவி
2. கூர்மை
சொல் பொருள் விளக்கம்
1. உண், பருகு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வைகிற்,பழம் சோறு அயிலும் முழங்கு நீர் படப்பை – புறம் 399/11 விடியலில், பழஞ்சோற்றை உண்ணும் முழங்குகின்ற நீரையுடைய தோட்டங்கள் கரும்பின்,கால் எறி கடிகை கண் அயின்று அன்ன – குறு 267/3 கரும்பின், அடிமரத்தைத் துண்டித்து அதன் துண்டத்தை உண்டது போல அயில் உருப்பு அனைய ஆகி – சிறு 7 இரும்பு வெப்பமேற்ற தன்மையது ஆகி, அயில்வாய்க் கூர்முகச் சிதலை வேய்ந்த – அகம் 167/18,19 வேலின் முனை போன்ற கூரிய முகத்தினையுடைய கறையான் மூடிக்கொள்தலின் அறை வாய் குறும் துணி அயில் உளி பொருத – சிறு 52 வெட்டின வாயையுடைய குறிய மரக்கட்டையைக் கூர்மையான உளி குடைந்த அயில் நுனை மருப்பின் தம் கை இடை கொண்டு என – முல் 34 கூரிய முனைகளையுடைய கொம்பினில் தம் துதிக்கையை தூக்கிப்போட்டதைப் போல்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்