சொல் பொருள்
அரக்கல் – முகம் கண் கால் கை முதலியவற்றைத் தேய்த்தல்.
பரக்கல் – சுற்றும் முற்றும் திருதிருவென அகல விழித்தல்.
சொல் பொருள் விளக்கம்
குழந்தை அழும்போதும் அச்சத்தால் ஒருவர் மருளும் போதும் முகம் முதலியவற்றைத் தேய்த்தலையும் ‘திருதிரு’ வென அங்கும் இங்கும் மருண்டும் வெருண்டும் பார்த்தலையும் கண்டு ‘அரக்கப்பரக்க’ விழிப்பதாகச் சொல்லுவர். அறியாப் புதிய இடத்தில் திகைப்போடு இருப்பவனையும் ‘அரக்கப் பரக்க’ விழிப்பதாகச் சொல்லுவர்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்