1. சொல் பொருள்
அரிதல் – வெட்டுதல் அல்லது அறுத்தல்.
நெற்பயிரை அரிந்து வரிசை வரிசையாகப் போடுதல் அரி, அரிசி
1. (வி) 1. கறையான் போன்றவை ஒரு பொருளைச் சிறிது சிறிதாகத் தின், 2. அறுத்தறுத்து ஒலி, , 3. (கதிர்களை) அறு, 4. சல்லடை போன்றவற்றில் வடிகட்டு, 5. நீக்கு, 6. நீர் அறுத்துச் செல், 7. வெடிக்கப்பெறு,
2. (பெ) 1. அரியப்பட்ட நெற்கதிர், 2. குழம்பினின்றும் அரித்தெடுக்கப்பட்ட மீன்துண்டங்கள், 3. நார்க்கூடையால் வடிகட்டப்பட்ட கள், 4. வண்டு, 5. மென்மை, 6. கண் வரி, 7. பரல், 8. பொன், செல்வம், 9. அழகு, 10. சிங்கம், 11. அரிசி, 12. காளை, 13. தவளை,
2. சொல் பொருள் விளக்கம்
‘வாழைக்காய் அரிந்தாள்’; ‘பழத்தை அரிந்து கொடு’ எனுஞ் சொற்றொடர்களில் அப்பொருள் தெற்றென நிற்றல் காண்க. ‘செல்லரித்த ஏடு’; ‘பூச்சி அரித்த பயிர்’; ‘அரிசி அரித்தல்’ (கல் பிரித்து ஒழுக்குதல்) ‘அரிக்குதல்’ (வருத்துதல்) என்பனவும் அஃதே உணர்த்தும்.
ஆதலின் அரிதல் , அறுத்தல் ஒரே பொருளைக் குறிக்கும் இருசொற்களாம் என்பது பெற்றாம்.
நெல் புல் முதலியவற்றை அறுக்கும் வாளை அரிவாள் என்பதும், அறுத்து ஒன்றாகத் திரட்டப்பட்ட நெற்கதிர்களை அரிகள் என்பதும் நாம் மேலே விளக்க முயன்றதைத் தெளிவாக்குகின்றதன்றோ!
அங்ஙனமாயின் ஒரே அடியினின்றும் பிறந்த சொற்கள். (அரி, அறி) நாளாவட்டத்தில் தோற்றப் பொருளினின்றும் விரிந்த வேற்றுமை உடையனவாய் வழங்கத் தலைப்பட்டபோது பொருளுக்கு இடையூறு நேரா வண்ணம் தமிழ்ப்பெரியார் அச்சொற்களை ஏற்றவாறு திருத்தி அமைத்திருக்க வேண்டும். (செந்தமிழ்ச் செல்வி – சிலம்பு. 2: 155 – 156.)
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
eat away by insects like white ants, make intermittent noise; to reverberate; cut away ears of paddy, grains etc., filter by a sieve like object, remove, water flowing intermittently, be split, cut off ears of paddy, pieces of fish sieved from porridge, toddy filtered by a sieve like object, beetle, humming insect, softness, (red)lines in the white of the eye, pebbles or gems put inside an anklet, gold, wealth, beauty, lion, rice, bull, frog
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
பண்டு தான் கொண்ட சில் அரி சிலம்பினை - சிலப்.புகார் 0/25 அரி மயிர் முன்கைக்கு அமைவுற அணிந்து - சிலப்.புகார் 6/94 மாலை வாங்கிய வேல் அரி நெடும் கண் - சிலப்.புகார் 8/72 அரிந்து கால் குவித்தோர் அரி கடாவுறுத்த - சிலப்.புகார் 10/136 அரி அரன் பூமேலோன் அக மலர் மேல் மன்னும் - சிலப்.மது 12/105 ஆய் பொன் அரி சிலம்பும் சூடகமும் மேகலையும் ஆர்ப்ப ஆர்ப்ப - சிலப்.மது 12/116 அரி முக அம்பியும் அரும் துறை இயக்கும் - சிலப்.மது 13/177 சிந்து அரி நெடும் கண் சிலதியர்-தம்மொடு - சிலப்.மது 16/138 ஐ அரி உண்கண் அழுது ஏங்கி அரற்றுவாள் - சிலப்.மது 19/25 அரிமான் ஏந்திய அமளி மிசை இருந்தனன் - சிலப்.மது 20/34 இணை அரி சிலம்பு ஒன்று ஏந்திய கையள் - சிலப்.மது 20/39 அஞ்சன பூழி அரி தாரத்து இன் இடியல் - சிலப்.வஞ்சி 24/24 அரிமான் ஏந்திய அமளி மிசை இருந்த - சிலப்.வஞ்சி 25/78 அரி பரந்து ஒழுகிய செழும் கயல் நெடும் கண் - சிலப்.வஞ்சி 27/182 அரி இல் போந்தை அரும் தமிழ் ஆற்றல் - சிலப்.வஞ்சி 27/189 சிதர் அரி பரந்த செழும் கடை தூது - சிலப்.வஞ்சி 28/20 ஐஅரிஉண்கண் அவன் துயர் பொறாஅள் - மணி 0/77 தத்து அரி நெடும் கண் தன் மகள் தோழி - மணி 2/7 ஒள் அரி நெடு கண் வெள்ளி வெண் தோட்டு - மணி 3/118 புள் ஒலி சிறந்த தெள் அரி சிலம்பு அடி - மணி 5/111 அன்றில் பேடை அரி குரல் அழைஇ - மணி 5/127 ஐஅரிஉண்கண் அழு துயர் நீங்கி - மணி 16/45 செல்லல் செல்லல் சே அரி நெடுங்கண் - மணி 21/27 ஐ அரி நெடு கண் ஆய்இழை கேள் என - மணி 21/45 சே அரி நெடும் கண் சித்திராபதி மகள் - மணி 22/177 இலங்கு அரி நெடு கண் இராசமாதேவி - மணி 23/7
5. பயன்பாடு
‘வாழைக்காய் அரிந்தாள்’; ‘பழத்தை அரிந்து கொடு’; செல்லரித்த ஏடு’; ‘பூச்சி அரித்த பயிர்’; ‘அரிசி அரித்தல்’
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்