சொல் பொருள்
அரிப்பெடுத்தல் – சினமுண்டாதல், பால்வெறியுண்டாதல்
சொல் பொருள் விளக்கம்
அரிப்பு என்பது ஊறல், வியர்க்குறு, வெப்பு இவற்றால் தோலில் பொரியுண்டாகும் போது, அதனால் தினவுண்டாவது அரிப்பு எனப்படும். செந்தட்டி, தட்டுப்பலா முதலிய செடிகள் படினும் அரிப்பு உண்டாகும். ஆனால் இவ்வரிப்பு அதனைக் குறியாமல் மன அரிப்பு அல்லது மன எரிச்சலாம் சினத்தையும், பாலுறவு தேடும் வெறியையும் குறிப்பதாக வழங்குகின்றது. ‘அரிசினம்’ என்பது ஆழ்வார் ஆட்சி. அரிப்பெடுத்துத் திரிகிறான் என இகழ்வது பின்னதாம் பொருளது; அரி என்பதற்கு எரி என்னும் பொருளுண்டென்பது அறியத்தக்கது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்