சொல் பொருள்
அரியாடு – செந்நிற ஆடு
கரியாடு – கருநிற ஆடு.
சொல் பொருள் விளக்கம்
அரியாடு செம்மறியாடு எனப்படும். காராடு ஆகிய கரியாட்டை வெள்ளையாடு – வெள்ளாடு என்பர். அதனை மங்கல வழக்கு என இலக்கண நூலார் கூறுவர். அரி சிவப்பாதல், ‘செவ்வரி’ என்பதாலும் அறிக.
செம்மறியாடும் வெள்ளையாடும் தனித்தனியியல்புடையவை. கூடி நடக்கவோ, மேயவோ செய்யாதவை. தாமே தனித்தனியாகப் பிரிந்து தம் கூட்டத்துடன் கூடிக்கொள்ளக் கூடியவை. ஆகவே இவற்றின் இயல்பை யறிந்தோர் இணையத்தகாத இருவர் இணையக் காணின் அரியாடும் கரியாடும் போல என்பர்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்